மலாக்காவில் ரியோ x தேசிய இளைஞர் தினம் கொண்டாட்டம்

கோலாலம்பூர், மே 23-

2024 ஆம் ஆண்டுக்கான ரியோ x ( எக்ஸ் ) தேசிய இளைஞர் தினம் , வரும் மே 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மலாக்காவில் உள்ள டத்தாரான் பஹ்லவன்- னில் நடைபெறவுள்ளது. இளைஞர்களிடையே கலை மற்றும் படைப்பாற்றல் ஆர்வலர்களின் பங்கேற்பை மையமாகக் கொண்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புத்துறை அமைச்சின் கீழ் இருக்கும் MyCreative Ventures Sdn. Bhd. ஏற்பாடு செய்துள்ள கெம்பாரா ரியோ நிகழ்ச்சியின் கீழ் பல்வேறு விற்பனைகள், உணவுகளை வாங்குவதற்கு ஒரு தளமாக இது விளங்கும் என்று என தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சிங் கூறினார்.

“கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளுக்கு உதவுவதே எங்கள் விருப்பமாகும். அதனால் அவர்கள் தங்கள் தயாரிப்புகளை பொதுமக்கள் முன்னிலையில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு இதுவொரு நல்ல வாய்ப்பாகும் என்று தியோ நீ சிங் குறிப்பிட்டார்.

“இந்த வார நிகழ்ச்சியில் நாங்கள் 12 விற்பனையாளர்களைக் கொண்டு வந்துள்ளோம். அவர்கள் தரமான, ஆக்கப்பூர்வமான தயாரிப்புகளைக் கொண்ட இளைஞர்கள். அதனால்தான் இந்த குழு எங்கள் ஆதரவிற்கு தகுதியானது,” என்று அவர் TV1 இல் ஒளியேறிய செலாமாட் பாகி மலேசியா நிகழ்ச்சியில் கூறினார்.

கூடுதலாக, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவில் ஹுஜான், இன்சோம்னியாக்ஸ், டோல்லா, புங்கா, iam நீட்டா போன்ற பல பிரபலமான கலைஞர்களின் பங்கேற்புடன் இலவச இசை நிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் கண்டு களிக்க முடியும் என்று தியோ நீ சிங் கூறினார்.

“கடந்த ஆண்டு நாங்கள் நான்கு இடங்களில் இந்த கெம்பாரா ரியோ நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம். இதன் ஒட்டுமொத்த விற்பனை சுமார் 1.3 மில்லியன் வெள்ளியாக பதிவு செய்யப்பட்டது.

ஆகவே, இந்த ஆண்டு அதை ஏழு இடங்களாக உயர்த்தினோம். செந்துல் டிப்போ மற்றும் ஜோகூர் பாருவுக்குப் பிறகு மூன்றாவது இடமாக மலாக்காவில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..

2024 ஆம் ஆண்டுக்கான ரியோ x தேசிய இளைஞர் தினம் கொண்டாட்டம், இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கொண்டாடத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கவுள்ளார் என்று தியோ நீ சிங் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS