ஷாஹ் அலாம், மே 23-
UiTM எனப்படும் மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் பிரத்தியேகமாக பூமிபுத்ராக்களுக்கு மட்டுமே சொந்தம் என்பதில் அம்னோ இளைஞர் பிரிவு ஒரு போதும் விட்டுக்கொடுக்காது என்று தெரிவித்துள்ளது.
மலாக்கார பூமிபுத்ரா மாணவர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்களின் தலையெழுத்தை மாற்றுவதில் மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் முக்கிய பங்காற்றி வருகின்றது.
மலாய்ககார பூமிபுத்ராக்களை கல்வி ரீதியாக உயர்த்தி, ஓர் உன்னத நிலைக்கு கொண்டு வரும் அந்த பல்கலைக்கழகத்தை தற்காப்பதில் ஓர் அங்குலம்கூட விட்டுக்கொடுக்கும் போக்கு கடைப்பிடிக்கப்படாது என்று அம்னோ இளைஞர் பிரிவின் ஆட்சிக்குழு உறுப்பினர் ஷா ஜனுரிமான் நுவார் பராஸ் கான் அறிவித்துள்ளார்.