கோலாலம்பூர், மே 27-
ஜாலான் ஈப்போ – கோலாலம்பூர் – ரிலிருந்து தலைநகருக்கு செல்லும் 15 ஆவது கிலோமீட்டர் தொலைத்தூரத்தில் பாதசாரி ஒருவர் மீது பல வாகனங்கள் மோதப்பட்டதில் அவர் உயிரிழந்தார்.
இன்று காலை 6.18 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தை குறித்து போலீஸ் தரப்புக்கு புகார் கிடைக்கப் பெற்றதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் நூர் ஆரிபின் முகமது நசீர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட அந்நபர் ப்ரிமா செலாயாங் – கிலிருந்து செலாயாங் செகார் -ரில் உள்ள தொழிற்சாலைக்கு கால்நடையாக சென்றுக் கொண்டிருக்கும் போது சாலையை கடக்க முற்பட்டு, பல வாகனங்கள் மோதப்பட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக நூர் ஆரிபின் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
மேலும், பாதிக்கப்பட்ட நபரின் உடல் சவப்பரிசோதனைக்காக செலாயாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதுடன் இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 41 (1) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொண்டு வருவதாக நூர் ஆரிபின் அறிவித்தார்.