16 ஆவது மாடியிலிருந்து விழுந்த மூதாட்டி பாதுகாப்பாக மீட்கப்பட்டார்

கோலாலம்பூர், மே 27-

கோலாலம்பூர், டாமான்சாரா டாமாய் -யில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் 16 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்த மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக காப்பாற்றினர்.

இச்சம்பவம் குறித்து இன்று காலை 9.58 மணியளவில் தீயணைப்பு நிலையத்திற்கு அவசர அழைப்பு கிடைக்கப் பெற்றதாக சிலாங்கூர், மலேசிய தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் செயல்பாட்டு பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

சுங்கை பூலோ தீயணைப்பு மீட்பு நிலையத்திலிருந்து மொத்தம் 13 தீயணைப்பு வீரர்கள் உட்பட மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அஹ்மத் முக்லிஸ் கூறினார்.

அம்மூதாட்டி 16 ஆவது மாடியில் உள்ள அவரின் வீட்டிலிருந்து 15 ஆவது மாடிக்கு விழுந்ததாகவும், காயங்கள் ஏதுமின்றி அதிஷ்டவசமாக அவர் உயிர் தப்பியதாகவும் அஹ்மத் முக்லிஸ் மேலும் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS