ஒரு பெண் உட்பட 12 பேர் கைது

கோலாலம்பூர், மே 27-

அமெரிக்கர்களை இலக்காக கொண்டு, Love Scam மற்றும் ஓன்லைன் சூதாட்ட மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஒரு பெண் உட்பட 12 பேரை புக்கிட் அமான் போலீசார் கைது செய்துள்ளனர்.

18 க்கும் 43 க்கும் இடைப்பட்ட வயதுடைய அநத் 12 பேரும் கடந்த மே 16 ஆம் தேதி கோலாலம்பூரில் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வர்த்தக குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் தலைவர் ரம்லி முகமது யூசுப் தெரிவித்தார்.

ஓன்லைன் தொடர்பில் காதல்மொழி பேசி, பண மோசடி செய்த இந்த கும்பலை முறியடித்தது மூலம் 33 கைப்பேசிகள், ஒரு தங்க சங்கிலி, தங்க மோதிரங்கள் மற்றும் பலதரப்பட்ட நாடுகளின் நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ரம்லி முகமது குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாண்டு ஏப்ரல் மாதம் முதல் செயல்படத் தொடங்கிய இந்த கும்பலில் உள்ள அனைவரும் கைப்பேசி அழைப்பாளர்களாக மாதம் ஒன்றுக்கு 2,500 வெள்ளி சம்பளம் மற்றும் நான்கு விழுக்காடு கமிஷன் தொகையும் கொடுக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS