கோலாலம்பூர், மே 27-
இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா யோஹ்- வின் கணவருடன் தொடர்பு கொண்டுள்ளதாக கூறப்படும் Asia Mobility Technologies Sendirian Berhad- நிறுவனத்திற்கு மொபிலிட்டி சிலாங்கூர் குத்தகை வழங்கப்பட்டதில் எந்த குற்றத்தையும் காண முடியவில்லை என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM- மின் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் என்ற முறையில் ஹன்னா யோஹ் தலைமையேற்றுள்ள இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சு, அந்த குத்தகையை வழங்கவில்லை. மொபிலிட்டி சிலாங்கூர் எனும் அந்த குத்தகையை சிலாங்கூர் மாநில அரசாங்கம் வழங்கியுள்ளதாக அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.
அந்த குத்தகையை இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சு வழங்கியிருக்குமானால் கதை வேறு. ஆனால், அந்த குத்தயை சிலாங்கூர் அரசாங்கமே நேரடியாக வழங்கியிருப்பதால் அதில், ஹன்னா யோஹ்- வின் பங்கேற்பு இருப்பதை காண முடியவில்லை என்று அஸாம் பாக்கி விளக்கினார்.
ஹன்னா இயோவின் கணவர் இராமச்சந்ததிரன் முனியாண்டி தலைமை செயல்முறையாகவும், தோற்றுநராகவும் உள்ள Asia Mobility Technologies Sendirian Berhad- நிறுவனத்திற்கு Mobility Selangor குத்தகை வழங்கப்பட்டு இருப்பதைத் தொடர்ந்து SPRM விசாரணை செய்ய வேண்டும் என்று மசீச. இளைஞர் பிரிவுத் தலைவர் Saw Yee Fung விடுத்துள்ளார்.
தனது கணவர் இராமச்சந்திரன் முனியாண்டி அரசாங்க குத்தகை பெற்றது தொடர்பில் இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியிலிருந்து ஹன்னா இயோ விலக வேண்டும் அல்லது அவரின் கணவர் இராமச்சந்திரன் முனியாண்டி, ஆசியா மொபிலிட்டி டெக்னாலஜிஸ் நிறுவனத்திலிருந்து பதவி விலக வேண்டும் என்று பினாங்கு முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் P. இராமசாமி கோரிக்கை விடுத்து இருப்பது தொடர்பில் அஸாம் பாக்கி விளக்கம் அளித்துள்ளார்.