கிள்ளான், மே 27-
கிள்ளான் பள்ளத்தாக்கில் இன்று மாலையில் பெய்த இடியுடன் கூடிய கனத்த மழையில் மரங்கள் வேரோடு பெயர்த்துக்கொண்டு வாகனங்கள் மீது விழுந்து சேதத்தை ஏற்படுத்தின.
கோலாலம்பூலிருந்து ஜாலான் புச்சோங்-கிற்கு செல்லும் பிரதான சாலையான ஜாலான் கிள்ளான் லாமா-வில் Am வங்கி- கிளைக்கு முன்னாள் ஒரு பெரிய மரம் வேரோடு பெயர்த்துக்கொண்டு சாய்ந்ததில் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சேதமுற்றன.
தீயணைப்பு, மீட்புப்படையினர் உதவியுடன் மரத்தையும், அதன் கிளைகளையும் அகற்றும் பணியில் கோலாலம்பூர் மாநகர் மன்றம் ஈடுபட்டது.
மரம் விழுந்த காட்சி, ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளது. நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சில கார்களிலிருந்து மக்கள் அவசர அவசரமாக வெளியேறுவதை அதில் காண முடிந்தது.