கோத்தா பாரு, மே 27-
கொடிய விலக்கினத்தால் கடித்து குதறப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் முதியவர் ஒருவரின் சடலம், செம்பனைத் தோட்டத்திற்குள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கிளந்தான், கோலா க்ரை, கம்போங் புமுட் சைஹ் என்ற செம்பனைத் தோட்டத்திற்குள் 70 வயது மதிக்கத்தக்க அந்த முதியவரின் உடல் நேற்று இரவு 7.30 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டது.
அந்த முதியவர், ஐந்து நாட்களுக்கு முன்பு இறந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. உடல் மற்றும் கைகால்கள் கடித்து குதறப்பட்டு இருந்ததாக கோல கிராய் மாவட்ட போலீஸ் தலைவர் மஸ்லான் மாமத் தெரிவித்தார்.