வெங்காய மூட்டைகள் கொள்கலனின் போதைப்பொருள்

ஜொகூர் பாரு, மே 27-

வெங்காய மூட்டைகளை ஏற்றி வந்த கொள்கலனின் குளிரூட்டியில் ஒரு கோடியே 30 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 51 கிலோ கோகைன் போதைப்பொருளை ஜோகூர் மாநில சுங்கத்துறை கைப்பற்றியுள்ளது.

கடந்த மே 15 ஆம் தேதி ஜோகூர், கெலாங் பாத்தா, தஞ்சோங் பெலேபாஸ் துறைமுகத்தில் வந்த சேர்ந்த வெங்காய மூட்டைகள் கொள்கலனின் சுங்கத்துறையினர் மேற்கொண்ட சோதனையில் அதன் குளிரூட்டியின் உட்பகுதிக்குள் பெரியளவிலான போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக அதன் இயக்குநர் அமினுல் இஸ்மீர் முகமட் சொஹாமி தெரிவித்துள்ளார்.

அந்த கொள்கலனில் போதைப்பொருள் இருப்பது சுங்கத்துறையின் உளவுப்பிரிவின் மூலம் கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.

WATCH OUR LATEST NEWS