கோலாலம்பூர், மே 27-
அரசாங்கம் அறிவித்துள்ள டீசலுக்கான இலக்குக்கு உரிய மாதாந்திர உதவித் தொகையை பெறும் Program Bantuan Subsidi Madani திட்டத்திற்கு நாளை மே 28 ஆம் தேதி செவ்வாய்கிழமை முதல் பொது மக்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் டீசல் எண்ணெய்யை பயன்படுத்தம் விவசாயிகள், சிறு தோட்டக்காரர்கள் மற்றும் சொந்த வாகனமோட்டிகள் மாதம் தோறும் 200 வெள்ளியை பெற முடியும் என்று இரண்டாவது நிதி அமைச்சர்டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்துள்ளார்.
டீசல் எண்ணெய்யை பயன்படுத்தும் சொந்த வாகன உரிமையாளர்கள் Budi Individu திட்டத்தின் மூலமாகவும், விவசாயிகள் மற்றும் சிறுத் தோட்டக்காரர்கள் Budi Agri- Komoditi திட்டத்தின் வாயிலாகவும் இந்த மாதாந்திர நிதி உதவியை பெற முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.