கோலாலம்பூர், மே 27-
2023 ஆம் ஆண்டுக்கான SPM தேர்வு முடிவை இன்று பெற்ற மாணவர்கள், தொடர்ந்து TVET போன்ற பொறியியில் மற்றும் தொழில்கல்வியை பயில்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி கேட்டுக்கொண்டுள்ளார்.
எதிர்காலத்தில் நாட்டிற்கு TVET கல்வி சார்ந்த அதிகமான மனித வளங்கள் தேவைப்படுகின்றன காரணத்தினால் நாட்டின் தேவையை அறிந்து TVET கல்வியில் கவனம் செலுத்துவது குறித்து SPM தேர்வு முடித்தவர்கள் சிந்திக்க வேண்டும் என்று TVET நடவடிக்கை மன்றத்தின் தலைவருமான துணைப்பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
தவிர, 2023 ஆம் ஆண்டுக்கான SPM தேர்வில் சிறந்த அடைவு நிலையைப்பெற்ற நாடு முழுவதும் உள்ள 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் தமது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டார்.