செராஸ், மே 28-
செராஸ், அலாம் டாமாய் -யில் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்தப்பட்டிருந்த ஐந்து வாகனங்கள் சேதமடைந்தன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் இரண்டு பெரோடுவா மைவி, பெரோடுவா விவா, டொயோட்டா வியோஸ் உட்பட ஹோண்டா HRV ஆகிய கார்கள் பாதிக்கப்பட்டன.
இச்சம்பவம் குறித்து இரவு 11.55 மணியளவில் போலீஸ் தரப்புக்கு புகார் கிடைக்க பெற்றதாகவும், பினாங்கிலிருந்து வந்து கொண்டிருந்த அப்பேருந்து அருகிலுள்ள பயணிகள் தங்கும் அடுக்குமாடி குடியிருப்பில் விபத்துக்குள்ளாகியதாக கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் துணைத்தலைவர் கண்காணிப்பாளர் சுஃபியன் அப்துல்லா தெரிவித்தார்.
33 வயது அப்பேருந்து ஓட்டுநர் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அவ்வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகியதாக சுஃபியன் அப்துல்லா கூறினார்.
சம்பந்தப்பட்ட பேருந்தில் பயணித்த 11 ஆண்கள் மற்றும் 20 பெண்கள் எந்தவொரு காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக சுஃபியன் அப்துல்லா பதிலளித்தார்.