தெரெங்கானு , மே 28-
தெரெங்கானு , கம்போங் துரியன், ஜாலான் குவாலா தெரெங்கானு-குலா பெராங் -கின் 21 ஆவது கிலோமீட்டர் தொலைத்தூரத்தில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இன்று நள்ளிரவு 2.25 மணியளவில் நிகழ்ந்த இக்கோர சம்பவத்தை குறித்து போலீஸ் தரப்புக்கு அவசர அழைப்பு கிடைக்க பெற்றதாக மாராங், மாவட்ட போலீஸ் தலைவர் துணை கண்காணிப்பாளர் முகமது ரஸ்மான் செடபா தெரிவித்தார்.
கம்போங் கொண்டாங் -கிலிருந்து அஜில், ஃபெல்டா புக்கிட் பாடிங் -கில் இருக்கும் தமது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருக்கும் போது 22 வயது பெண் உட்பட அவரின் பிள்ளையும் இவ்விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முகமது ரஸ்மான் கூறினார்.
விபத்தில் பாதிக்கப்பட்ட இருவரின் உடல்களும் சவப்பரிசோதனைக்காக ஹுலு தெரெங்கானு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக முகமது ரஸ்மான் மேலும் குறிப்பிட்டார்.