கோலாலம்பூர், மே 28-
அரசாங்கத்தின் நிலத்தில் குடியிருக்க சட்டவிரோதமாக செயல்படும் வெளிநாட்டவர்களின் நடவடிக்கை அவ்விடத்தில் மேற்கொண்ட திடீர் சோதனையின் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு 12.30 மணியளவில் செந்தூலில் உள்ள ஒரு குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சம்பந்தப்பட்ட வீட்டிலிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட சில அந்நிய பிரஜைகளை மலேசிய குடிநுழைவுத்துறை அதிகாரிகள் வெற்றிகரமாக கைது செய்துள்ளனர்.
இச்சோதனையில் மொத்தம் 124 அந்நிய பிரஜைகள் சட்டவிரோதமாக செயல்பட்டதற்காக கைது செய்ததாக மலேசிய குடிநுழைவுத்துறையின் தலைமை இயக்குநரானடத்தோ ருஸ்லின் ஜூசோ கூறினார்.
அதிலும், சிலர் ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தைகளுடன் இருந்து வருவதாகவும் பெரும்பாலானோர் ரோஹிங்கியா-வை சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுவதாக ருஸ்லின் ஜூசோ தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட அந்நபர்கள் அனைவரும் மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்படவிருப்பதாக ருஸ்லின் ஜூசோ மேலும் தகவல் வெளியிட்டார்.