வெளிநாட்டில் தாம் பதுக்கிவைத்திருப்பதாக கூறப்படும் பில்லியன் கணக்கான பணத்தை மீட்டுவர, அன்வார் உதவ வேண்டுமென மகாதீர் கேலியாக கூறுகிறார்.

பெட்டாலிங் ஜெயா, மே 31-

வெளிநாட்டில் தாம் பதுக்கிவைத்துள்ளதாக கூறப்படும் பில்லியன் கணக்கான பணத்தை ஏழைகளுக்கு தானமாக வழங்க தாம் தயார். ஆனால், அந்த பணம் இருக்கின்ற இடத்தை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமக்கு தெரிவிக்க வேண்டுமென முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது நக்கலாக தெரிவித்துள்ளார்.

பில்லியன் கணக்கான பணத்தை திருடியவர்கள், அந்த பணத்தை ஏழைகளாக உள்ள மலாய்க்காரர்களுக்கு உதவ வேண்டும் என அன்வார் கூறுகிறார். அந்த பணத்தை ஏழைகளுக்கு வழங்க தாம் தயார்.

ஆனால், அந்த பணம் எங்கே இருக்கின்றது என்பது தமக்கு தெரியவில்லை. பணம் இருக்கின்ற இடம் குறித்து, அன்வார் தமக்கு கொஞ்சம் விளக்கம் அளிக்க வேண்டும்.

சுவிட்சர்லாந்து-ந்தில் அப்பணம் இருக்குமானால், அன்வார் -ருடன் சென்ற அதனை மீட்டுவர தாம் தயாராக இருப்பதாக 98 வயதாகும் மகாதீர் கூறினார்.

ஒருவேளை, வெளிநாட்டிலுள்ள பொருளகங்களில் தமக்கு கணக்குகள் இல்லாவிட்டால், அரசாங்கத்தின் பில்லியன் கணக்கான பணத்தை தாம் களவாடியிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கான அடிப்படை ஆதாரம் குறித்து, அன்வார் நீதிமன்றத்தில் பதிலளிப்பாரா?

அவரால் பதிலளிக்க முடியாது என்றால், தமக்கு எதிராக அடிப்படையற்ற குற்றச்சாட்டை முன்வைப்பதை அன்வார் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டுமென மகாதீர் வலியுறுத்தியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS