சிலாங்கூர், மே 31-
சிலாங்கூரில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் சுமார் ஒரு மணிநேரம் லாரியின் டேங்கரில் டீசலை நிரப்பிக் கொண்டிருந்த சந்தேகிக்கும் நபரை சிலாங்கூர், உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சகத்தின் அதிகாரிகள் கைது செய்தனர்.
கடந்த புதன்கிழமை அவ்விடத்தில் மேற்கொண்ட Ops Tiris 5.0 திடீர் சோதனையின் போது 50 வயது மதிக்கத்தக்க அந்த லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்ட வேளை, சம்பந்தப்பட்ட பெட்ரோல் நிலையத்தில் பணிப்புரியும் 30 வயதுடைய இரண்டு வங்காளதேச பிரஜைகள் விசாரணைக்கு உதவும் வகையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
டீசல் மானியத்தின் முறைகேட்டினை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையில், சம்பந்தப்பட்ட லாரியில் டீசலை கடத்தி இலாபம் சம்பாறிக்கும் முயற்சியில் அந்நபர்கள் ஈடுபட்டிருந்தது வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டதாக சிலாங்கூர், உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சகத்தின் அமலாக்கப் பிரிவு தலைவர் முகமது ஷஹ்ரான் முகமட் அர்ஷத் தெரிவித்தார்.
இச்சோதனையில் 500,000 வெள்ளி மதிப்பிலான 10,000 லீட்டர் டீசல் கடத்தப்பட்டிருப்பதாகவும் இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 8 ஆவது பிரிவின் கீழ் அந்நபர்கள் மீது விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் முகமது ஷஹ்ரான் கூறினார்.