நெகிரி செம்பிலான், மே 31-
பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டு, வணிகப் பொருட்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்ட போதிலும் நெகிரி செம்பிலான், சிரம்பானில் உள்ள இரண்டு உணவு வளாகங்கள் முறையான உரிமமின்றி இன்னும் பிடிவாதமாக செயல்பட்டு வருகின்றன.
நேற்று மாலை சிரம்பானில் உள்ள நான்கு வளாகங்களில் அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையில் அவ்விரு உணவகங்களும் போதுமான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்தி வியாபாரத்தில் ஈடுபட்டது தெரியவந்ததாக சிரம்பான் மாநகர் மன்றத்தின் மேயர், டத்தோ மாஸ்ரி ரசாலி தெரிவித்தார்.
அச்சோதனையில் விதிமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக தாய்லாந்து நாட்டை சேர்ந்த மூன்று ஆண்கள் உட்பட ஒரு பெண்ணும் பாக்கிஸ்தானை சேர்ந்த இரண்டு ஆண்களும் கைது செய்யப்பட்டதாக மாஸ்ரி ரசாலி கூறினார்.
பல குற்றங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட உணவகங்களில் உள்ள பொருட்கள் மற்றும் உபகரணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் மேலும் தகவலளித்தார்.