தீ விபத்தில் மின்சாரம் தாக்கியதில் மாது ஒருவர் பாதிக்கப்பட்டார்

கிளந்தான், மே 31-

கிளந்தான், கம்போங் லுண்டாங்- கில் ஐந்து வீடுகள் தீ விபத்துக்குள்ளாகியதில் மின்சாரம் தாக்கப்பட்டு மாது ஒருவர் கடுமையான பாதிப்புக்கு ஆளாகினார்.

பாதிக்கப்பட்ட 36 வயது அந்த மாது மேலதிக சிகிச்சைக்காக ராஜா பெரெம்புவான் ஜைனப் II மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டதாக தெரியப்படுகிறது.

இன்று அதிகாலை 3.15 மணியளவில் இச்சம்பவத்தை குறித்து கிடைக்கப் பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து மொத்தம் 31 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அதன் செயல்பாட்டு தலைவர் ரம்லி அப்துல்லா கூறினார்.

சம்பவ இடத்தை சென்றடைந்த வேளை, மூன்று வீடுகள் 100 சதவீதம் முற்றிலும் எரிந்து சாம்பலாகிய நிலையிலும் மேலும் இரண்டு வீடுகள் 70 சதவீதம் தீயில் பாதிப்படைந்திருப்பது கண்டறியப்பட்டதாக ரம்லி அப்துல்லா விவரித்தார்.

தீ ஏற்பட்ட காரணம் மற்றும் இழப்பீடு குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் இன்று குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS