கோலாலம்பூர், மே 31-
கடந்த மே 25 ஆம் தேதி பிரிக்கபிஎல்ட்ஸ்-சில் உள்ள காவல் நிலையத்தில் இரு பெண் போலீஸ் அதிகாரிகள் சண்டையிட்டு கொண்ட காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சண்டையில் அவ்விரு போலீஸ் அதிகாரிகளும் எந்தவிதமான ஆபத்து விளைவிக்கக்கூடிய ஆயுதங்களை பயன்படுத்தப்படவில்லை என்பதுடன் பொதுமக்கள் எவரும் இதில் சம்பந்தப்படவில்லை என்று பிரிக்கபிஎல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் கு மஷாரிமான் கு மஹ்மூத் தெரிவித்தார்.
அவ்விரு அதிகாரிகள் மீது நேர்மையாகவும் சரியான முறையிலும் வழக்கு விசாரணை மேற்கொள்ளப்படவிருப்பதாக கு மஷாரிமான் இன்று தகவல் அளித்தார்.
முன்னதாக, லான்ஸ் கார்போரல் பதவியிலிருக்கும் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பது குறித்து சம்பந்தப்பட்ட நபர் சமூக வலைத்தளங்களில் அறிக்கை ஒன்று பகிர்ந்து கொண்டது வைரலாகியது.