அம்பாங், மே 31-
மதுபோதையில் இருந்ததாக நம்பப்படும் ஆடவர் ஒருவர், 13 பாக்கெட் தின்பண்டங்களையும் மதுபானத்தையும் திருடிய குற்றத்திற்காக அம்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று ஒரு நாள் சிறைத்தண்டனையும், மூவாயிரம் வெள்ளி அபராதமும் விதித்தது.
ஒரு வேலையற்ற நபரான 31 வயது RG ரவீந்திரன் என்ற அந்த நபர், மாஜிஸ்திரேட் ஷஹரில் அனுவார் அஹ்மத் முஸ்தபா முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த மே 11 ஆம் தேதி காலை 1.22 மணியளவில் ஆரா டாமன்சாராவில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் பால், ஐஸ்கிரீம், தின்பண்டங்கள், மதுபானம் உட்பட ஐநூற்று 56 வெள்ளி 10 காசு மதிப்புள்ள பொருட்களை திருடியதாக ரவீந்திரன் குற்றஞ்சாட்டப்பட்டார்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 34 ஆவது பிரிவின் கீழ் ரவீந்திரன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.