ஜொகூர் பாரு, மே 31-
அரச பிரமுகர் ஒருவரின் உடன் செல்லும் மெய்க்காவலர்களில் ஒருவர், மாற்றுத் திறனாளியை தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவத்தை போலீசார் மூடவில்லை. அந்த விவகாரம் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் ருஸ்டி முகமது இசா தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட மெய்காவலர் தம்மை தாக்கியதாக புகார் அளித்த ஒரு மாற்றுத் திறனாளியான e-hailing ஓட்டுநர், இந்த விவகாரத்தை தாங்களே தீர்த்துக்கொள்வதாக இரண்டாவது புகார் செய்த போதிலும் போலீசார் இதன் மீதான விசாரணையை மூடவில்லை என்று ருஸ்டி முகமது இசா குறிப்பிட்டார்.
இந்த வழக்கு விசாரணையை மூடுவதற்கான அதிகாரம் தங்களிடம் இல்லை என்றும் இது சட்டத்துறை அலுவலகத்தின் கைகளில் உள்ளது என்றும் அவர் விளக்கம் அளித்தார்.