இந்தியா, மே 31-
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகள் இணைந்து நடத்தும் 9ஆவது டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரானது நாளை ஜூலை 1ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்குகிறது. இதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் வார்ம் அப் போட்டிகளில் விளையாடி வருகின்றன.
கடந்த 27 ஆம் தேதி தொடங்கிய வார்ம் அப் போட்டிகள் வரும் ஜூன் 1ஆம் தேதி இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான வார்ம் அப் போட்டிகளுடன் நிறைவடைகிறது. இதையடுத்து டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்குகிறது.
இந்த 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், நேபாள், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நியூசிலாந்து, அயர்லாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஓமன், கனடா, உகாண்டா, பப்புவா நியூ கினியா, தென் ஆப்பிரிக்கா, நமீபியா என்று மொத்தமாக 20 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.
இந்த 20 அணிகளும் 4 குரூப்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த ஏப்ரல் 30 அம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில், ஷிவம் துபே, யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், விராட் கோலி, ரிஷப் பண்ட் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஷிவம் துபே, அக்ஷர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், ஜஸ்ப்ரித் பும்ரா.
மேலும், ரிசர்வ் பிளேயர்ஸாக ரிங்கு சிங், சுப்மன் கில், கலீல் அகமது மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி ஜூன் 5ஆம் தேதி நியூயார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா விளையாடும் குரூப் சுற்று போட்டிகள் அமெரிக்காவிலேயே நடத்தப்பட இருக்கிறது.
இந்த 8 அணிகளும் 4 அணிகள் வீதம் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மற்ற 3 அணிகளுடன் ஒரு போட்டியில் விளையாடும். இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும். இதில், தோல்வி அடையும் அணி வெளியேறும். வெற்றி பெறும் 2 அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
இந்த நிலையில் தான் இன்று ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளூக்கு இடையிலான வார்ம் அப் போட்டிகள் நடைபெற்றன. இதில், முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 4 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்கள் குவித்தது. நிக்கோலஸ் பூரன் மற்றும் ரோவ்மன் பவல் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். பூரன் 75 ரன்கள் எடுக்க, பவல் 52 ரன்கள் எடுத்தனர்.
பின்னர், கடின இலக்கை துரத்திய பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியில் ஜோஸ் இங்கிலிஸ் மட்டுமே அதிகபட்சமாக 55 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் ஓரளவு ரன்கள் எடுத்துக் கொடுத்தனர். எனினும், ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் மட்டுமே எடுத்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதன் மூலமாக நாங்களும் பலம் வாய்ந்த அணி என்பதை வெஸ்ட் இண்டீஸ் அணியினர் நிரூபித்துள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் மட்டுமே 2 முறை டி20 உலகக் கோப்பை தொடரை வென்றுள்ளன. இதில், வெஸ்ட் இண்டீஸ் 2012 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் டிராபியை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.