ஜொகூர் பாரு, மே 31-
ஜோகூர், பொண்டியன், காயு அரா பசோங்- கில் உள்ள கம்போங் பாரிட் பாரு-வில் உள்ள ஒரு கோழிப்பண்ணை அருகில் நிறுத்தப்பட்டு இருந்த வெள்ளை நிற காரில் ஆடவர் ஒருவர் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 10.00 மணியளவில் உள்ளூர் இளைஞர் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் அந்த காரிலிருந்து சடலம் மீட்கப்பட்டதாக பொந்தியான் மாவட்ட போலீஸ் தலைவர் முகமது ஷோபி தாயிப் தெரிவித்தார்.
காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தவாறு காணப்பட்ட அந்த நபர், சில நாட்களுக்கு முன்பு இறந்து இருக்கலாம் என்பது பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று முகமது ஷோபி தாயிப் குறிப்பிட்டார்.