கோலாலம்பூர், மே 31-
மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் இரண்டு முன்னாள் தலைவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர விருதை அந்த மன்றம் வழங்கி சிறப்பு செய்துள்ளது.
அந்த மன்றத்தின் இரண்டு முன்னாள் தலைவர்களான ஹெண்டன் முகமது மற்றும் காலச்சென்ற சட்ட வல்லுநர் சுலைமான் அப்துல்ல ஆகியோரே அந்த இரு மூத்த வழக்கறிஞர்கள் ஆவர்.
மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் மேன்மைக்காக தன்னலமற்ற சேவையை வழங்கியதற்காக அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளதாக அந்த மன்றம் தெரிவித்துள்ளது.
இவ்விருவரில் வழக்கறிஞர் சுலைமான் அப்துல்லா, மலேசிய கப்பல் போக்குவரத்து வாரியத்தின் தோற்றுநரும், மலேசிய ஏர்லைன்ஸின் முதல் தலைவருமான காலஞ்சென்ற டான்ஸ்ரீ G. ராம ஐயரின் சகோதரர் ஆவார்.
G. ஸ்ரீனிவாசன் ஐயர் என்ற இயற்பெயர் கொண்ட வழக்கறிஞர் சுலைமான் அப்துல்லா, ஷரியா சட்டத்தில் நிபுணர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.