கணவர் உயிரிழந்தார், மனைவி படுகாயம்

டெனோம், மே 31-

டெனோம், ஜாலான் டெனோம் கெமாபோங், பத்து 8, கம்போங் சபோங் என்ற இடத்தில் இன்று காலை 11.30 மணியளவில் நிகழ்ந்த விபத்தொன்றில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததுடன், அவரின் மனைவி படுகாயத்திற்கு ஆளாகினார்.

தனது 66 வயது மனைவியுடன் 71 வயது முதியவர் பயணம் செய்த கார், எதிரே வந்த 10 டன் லோரியுடன் மோதியது. இதில் அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே மாண்ட வேளையில் அவரின் மனைவி படுகாயத்திற்கு ஆளாகி, டெனோம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS