ஷாஹ் அலாம், மே 31-
கூட்டரசு நெடுஞ்சாலையில் பெட்டாலிங் ஜெயாவிற்கு அருகில் பொருத்தப்பட்டுள்ள ராட்ஷச டிஜிட்டல் விளம்பரப்பலகை தீப்பிடித்துக்கொண்டதில் அந்த நெடுஞ்சாலை இன்று பிற்பகலில் பெரும் பரப்புக்கு இலக்கானது.
அந்த ராட்ஷச விளம்பரப்பலகையில் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருப்பதாக பிற்பகல் 1.15 மணியளவில் ஓர் அவசர அழைப்பை தீயணைப்பு, மீட்புப்படையினர் பெற்றதாக சிலாங்கூர் மாநில உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
பெட்டாலிங் ஜெயா, ஜாலான் பென்சலா, சுபாங் ஜெயா மற்றும் ஷாஹ் அலாம் ஆகிய நிலையங்களிலிருந்து வந்த தீயணைப்பு வண்டிகளில் 17 வீரர்கள் மற்றும் தன்னார்வாளர்கள் சுமார் ஒரு மணி நேரத்தில் தீயை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக அவர் குறிப்பிட்டார்.