கோலாலம்பூர், மே 31-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமினால் அறிவிக்கப்பட்ட புத்தகம் வாங்குவதற்கான 100 வெள்ளி பற்றுச்சீட்டு திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள உயர் கல்விக்கூடங்களை சேர்ந்த 12 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர் என்று உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த 100 வெள்ளி பற்றுச்சீட்டுத் திட்டம், வரும் ஜுன் முதல் தேதி தொடங்கி டிசம்பர் 31 ஆம் தேதி வரையில் கட்டம் கட்டமாக அமல்படுத்தப்படும் என்று ஓர் அறிக்கையில் உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.