பெட்டாலிங் ஜெயா, மே 31-
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது வெளிநாட்டில் கோடிக்கணக்கான வெள்ளிப் பணத்தை மூட்டை, மூட்டையாக பதுக்கி வைத்திருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அந்த மூட்டைகளை வெளிநாடுகளிலிருந்து தூக்கி வருவதற்கு நடப்பு அரசாங்கத்திற்கு உதவ, தாம் விரும்புவதாக துன் மகாதீரின் தீவிர ஆதரவாளரும், பார்ட்டி பூமிபுத்ரா பெர்காசா- வின் தலைருமான இப்ராஹிம் அலி, இன்று கிண்டல் அடித்துள்ளார்.
துன் மகாதீரால் திருடப்பட்டதாக கூறப்படும் கோடிக்கணக்கான பண மூட்டைகள் எங்கே பதுக்கி வைக்கப்பட்டுள்ளன என்பதற்கான இடத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மிக துல்லியமாக தமக்கு காட்டுவாரேயானால் அந்த மூட்டைகளை தொண்டூழீய அடிப்படையில் சுமந்து வந்து, அரசாங்கத்திடம் ஒப்படைக்க தாம் தயாாராக இருப்பதாக இப்ராஹிம் அலி, மிக குத்தலாக ஓர் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளார்.