இஸ்ரேல் கொடி, தம்பதியர் கைது

காஜாங், மே 31-

காஜாங்கில் உள்ள உணவகம் ஒன்றில் இஸ்ரேல் கொடியின் சின்னத்தை ஒட்டி, காட்சிக்கு வைத்திருந்த ஒரு தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளர்.

20 வயது மதிக்கத்தக்க உள்ளூரைச் சேர்ந்தவர்களான அந்த தம்பதியர், இன்று அதிகாலையில் காஜாங்கில் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்துள்ளார்.

அந்த தம்பதியர் பயன்படுத்திய கார் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS