ஜொகூர் பாரு, மே 31-
மாற்றுத் திறனாளி ஒருவர் தம்முடைய மெய்க்காவலர் ஒருவரால் தாக்கப்பட்டதாக கூறப்படுவது தொடர்பில் இச்சம்பவத்தில் அரச பரிபாலனத்தை சம்பந்தப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக ஜோகூர் ரீஜண்ட் துங்கு மக்கொத்தா இஸ்மாயில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த சம்பவத்துடன் அரச பரிபாலனத்தை தொடர்புபடுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருவதை தாம் உணர்ந்துள்ளதாக துங்கு மக்கொத்தா இஸ்மாயில் தெரிவித்தார்.
எனினும் இந்த சம்பவமானது தனக்கும், ஒட்டுமொத்த அரச பரிபாலனத்திற்கும் அப்பாற்பட்டதாகும். இதனை அரச பரிபாலனத்துடன் தொடர்புபடுத்துவது எந்த வகையிலும் நியாயமில்லை என்று இன்று மாலையில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் துங்கு மக்கொத்தா இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
எனினும் இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணையை நடத்துமாறு போலீஸ் துறையை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.