தனது அதிகாரிகளை போலீஸ் துறை தற்காக்காது

ஷாஹ் அலாம், மே 31-

கடந்த செவ்வாய்க்கிழமை கோலாலம்பூரில் உள்ள ஒரு ஹோட்டலின் பிரதான வரவேற்பு அறையில் மாற்றுத் திறனாளியான e-hailing ஓட்டுநர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அரச மலேசிய போலீஸ் படையைச் சேர்ந்த போலீஸ்காரர் சம்பந்தப்பட்டு இருப்பாரேயானால் இதில் விட்டுக்கொடுக்கும் போக்கு கடைப்பிடிக்கப்படாது என்று போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் உறுதி அளித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் போலீஸ்காரர் விசாரணைக்கு உதவும் வகையில் புக்கிட் அமானினால் விசாரணை அழைக்கப்படுவார் என்று ஐஜிபி குறிப்பிட்டார்.

போலீஸ் துறை மேற்கொள்ளும் எந்தவொரு விசாரணையிலும் குற்றம் இழைத்தவர் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிடாமல் இருப்பதை, எல்லா நிலைகளிலும் உறுதி செய்யப்படும் என்று டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS