பெட்டாலிங் ஜெயா, மே 31-
மலேசியாவிடமிருந்து சிங்கப்பூருக்கு கைநழுவிப் போன பவளப்பாறைத் தீவான பாத்து புத்தே மற்றும் பதுவான் டெங்கா, துபீர் செலாடன் ஆகிய தீவுகளின் அரசுரிமை வழக்கு தொடர்பாக வரும் ஜுன் 12 ஆம் தேதி அரச விசாரணை ஆணையத்தின் விசாணைக்கு ஆஜராகும்படி முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.
சாட்சியம் அழைப்பதற்கான அழைபாணை, துன் மகாதீருக்கு இன்று சார்வு செய்யப்பட்டுள்ளது. துன் மகாதீரிடம் விசாரணை ரகசியமாக நடத்தப்படாது. மாறாக, அந்த வழக்கு விசாரணையை பொதுமக்களும் தெரிந்துக்கொள்ளும் வகையில் பகிரங்கமாக நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச விசாரணையில் தாம் ஆஜராகவிருப்பதை துன் மகாதீர் உறுதிப்படுத்தியுள்ளார்.