ஜொகூர் பாரு, மே 31-
ஜோகூர் ரீஜண்ட் துங்கு இஸ்மாயில் சுல்தாம் இப்ராஹிம்- மின் உடன் செல்லும் மெய்க்காவலர்களில் ஒருவர் தம்மை தாக்கியதாக புகார் தெரிவித்துள்ள ஒருமாற்றுத் திறனாளிான e- hailing ஓட்டுநர், இப்பிரச்னையை நீட்டிக்க விரும்பவில்லை என்று இரண்டாவது போலீஸ் புகார் செய்து இருப்பதாக போலீஸ் துறை அறிவித்த போதிலும், அந்த இரண்டாவது புகாரை தயார் செய்தது போலீஸ்துறையே என்று அறிவித்துள்ளார்.
அந்த இரண்டாவது போலீஸ் புகாரை தயாரித்த போலீஸ் துறை, அதில் கையெழுத்திடுமாறு தம்மை நிர்பந்தித்ததாக 46 வயதுடைய அந்த மாற்றுத் திறனாளி தெரிவித்துள்ளார்.
அந்த இரண்டாவது புகாரில், இப்பிரச்னையை தாம் தீர்த்துக்கொள்ள விரும்புவதாகவும், இதனை தாம் நீட்டிக் கவிரும்பவில்லை என்றும் தயார் செய்யப்பட்டு இருந்ததாக இன்று பெட்டாலிங் ஜெயாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ஓங் இங் கியோக் என்ற அந்த மாற்றுத் திறனாளி தெரிவித்தார்.
அந்த இரண்டவாது புகாரின் போது போலீஸ் நிலையத்தில் இஸ்தானாவின் பிரதிநிதியும் வந்திருந்ததாக ஓங் இங் கியோக் குறிப்பிட்டார்.
அந்த நபர், இஸ்தானாவைச் சேர்ந்தவர் என்பது எப்படி உங்களுக்கு தெரியும் என்று கேட்ட போது, அதனை ஒரு போலீஸ்காரர் தமக்கு எழுதி கொடுத்தாக அந்த மாற்றுத்திறனாளி தெரிவித்தார்.
அரச பிரமுகரின் மெய்காவலர்களில் ஒருவர், கோலாலம்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மாற்றுத் திறனாளி ஒருவரைத் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இந்தப் பிரச்னையை நீட்டிக்க விரும்பவில்லை என்று அந்த மாற்றும் திறனாளி இரண்டாவது போலீஸ் புகார் செய்துள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் ருஸ்டி முகமது இசா நேற்று தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.