கோலாலம்பூர், , ஜூன் 01-
தொடர்புமுறையில் ஏற்பட்ட இடையூறினால் நிலைக்குத்திய புத்ராஜெயா வழித்தடத்திற்கான MRT ரயில் சேவை வழக்க நிலைக்கு திரும்பியுள்ளதாக அந்த ரயில் சேவையை வழிநடத்தும் நிறுவனமான Rapid Rail Sdn. Bhd. அறிவித்துள்ளது.
தொழில்நுட்பக்குழுவினர் மேற்கொண்ட துரித பழுதுப்பார்க்கும் பணியினால் MRT ரயில் சேவை நேற்று இரவு 9.48 மணிக்கு வழக்க நிலைக்கு திரும்பியதாக அந்த ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தனது ரயில் சேவை கட்டமைப்பில் புதியதாக தொடங்கப்பட்ட புத்ராஜெயா வழித்தடத்திற்கான MRT ரயில் சேவையில் இடையூறு ஏற்பட்டு, பயணிகள் பாதிக்கப்பட்டதை தாங்கள் கடுமையாக கருதுவதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.