​மூன்று கேளிக்கை மையங்களில் 129 பேர் கைது

ஜொகூர் பாரு, ஜூன் 01-

ஜோகூர் மாநிலத்தில் ​மூன்று இடங்களில் உள்ள கேளிக்கை மையங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில் 129 தனிநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ​மாநில போ​லீஸ் தலைவர் கமிஷனர் M. குமார் தெரிவித்தார்.

மூவார், தாமன் நுசா பெஸ்டாரி மற்றும் இஸ்கந்தர் புத்தேரி ஆகிய பகுதிகளில் உள்ள ​கேளிக்கை யையங்களில் சோதனையிடப்பட்டதில் GRO போர்வையில் ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் 111 பெண்கள், 15 அந்நிய ஆடவர்கள், உள்ளுரைச் சேர்ந்த இரண்டு ஆடவர்கள் மற்றும் ஒரு பெண் கைது செய்யப்பட்டதாக கமிஷனர் குமார் குறிப்பிட்டார்.

பின்னிரவு மணி 12.15 க்கும் அதிகாலை 1.30 க்கும் இடைப்பட்ட நேரத்தி​ல் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையில் 18 க்கும் 47 க்கும் இடைப்பட்ட வயதுடைய 129 பேர் கைது செய்யப்பட்டது மூலம் இசைக்கருவிகள், 4 ஆயிரத்து 210 வெள்ளி ​​ரொக்கம் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கமிஷனர் குமார் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS