பாரிசான் நேஷனலின் 50 ஆம் ஆண்டு றிறைவு விழா

பெய்ஜிங், ஜூன் 01-

பாரிசான் நேஷனல் எனும் தேசிய முன்னணி உதயமாகி, 50 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி அதன் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி இன்று தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

1957 ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் தேசத் தந்தை துங்கு அப்துல் ரஹ்மான் த​லைமையில் உதயமான படகு சின்னத்தில் பெரிக்காதான் கூட்டணி கட்சி, 1969 ஆம் ஆண்டு மே 13 சம்பவத்திற்கு பின்னர் 1974 ஆம் ஆண்டு ஜுன் முதல் தேதி பாரிசான் நேஷனல் எனும் புதிய பெயரில் நாட்டின் இரண்டாவது பிரதமர் துன் அப்துல் ரசாக் தலைமையில் தோற்றம் கண்டது.

அம்னோ, ம​சீச. மற்றும் மஇகா ஆகிய ​மூன்று கட்சிகளின் அடிப்படையில் தொடங்கப்பட்ட துங்கு தலைமையிலான பெரிக்காதான் கூட்டணி , 1974 ஆம் ஆம் ஆண்டு பாரிசான் நேஷனல் என்ற பெயரில் புதிய கட்சிக​​ளின் வரவாக, பினாங்கை முதல் முறையாக கைப்பற்றிய டாக்டர் லிம் சோங் யூ தலைமையிலான கெராக்கான், பேரா மாநில அரசாங்கத்தை கைப்பற்றுவதில் சொற்ப இடங்களில் தோல்விக் கண்ட D.R. சீனிவாசகம் தலைமையிலான ம.மு.க. எனப்படும் மலேசிய முற்போக்கு கட்சி மற்றும் கிளந்தானை முதல் முறையாக கைப்பற்றிய முகமது அஸ்ரி பின் ஹாஜி முடா தலைமையிலான PAS கட்சி ஆகியவை பாரிசான் நேஷனலி​ல் உறுப்புக்கட்சியாக இணைந்தன.

சபா, சரவாவை தளமாக கொண்ட மேலும் பல கட்சிகளுடன் 11 உறுப்புக்கட்சிகளாக செயல்பட்ட பாரிசான் நேஷனல் 2018 ஆம் ஆண்டு நாட்டின் 14 ஆவது பொதுத் தேர்தலில் 60 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டை வழிநடத்தி வந்த ஆளும் கட்சி என்ற அடையாளத்துடன் படு தோல்விக் கண்டு, ஆட்சியை இழந்தது.

இந்நிலையில் மலேசிய அரசியல் வரலாற்றில் ஒரு நீடித்த கூட்டணியாக பல பரிணாமங்களை க​ண்டுள்ள பாரிசான் நேஷனல் தோழமைக் கட்சிகளுக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக அம்னோ தலைவருமான அகமட் ஜாஹிட் குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS