பெட்டாலிங் ஜெயா, ஜூன் 01-
அமெரிக்கா, அலாஸ்கா-வில் டேனாலி பனி மலைச்சிகரத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் குடும் குளிரில் சிக்கி,பரிதவித்த மலேசியாவைச் சேர்ந்த மூன்று மலையேறிகளில் ஒருவர் உயிரிழந்தார்.
37 வயத சுல்கிப்லி யூசுப் என்ற மலேசிய மலையேறி, கடந்த மே 29 ஆம் தேதி உள்ளூர் நேரப்படி காலை 6 மணியளவில் உயிரிழந்ததாக மலேசிய அல்பைன் மன்றம் தனது முகநூலில் பதிவு செய்துள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 19,700 அடி உயரத்தில் உள்ள கால்பந்து மைதானம் என்ற பகுதியில் உள்ள பனிக் குகையில் தஞ்சம் புகுந்த சுல்கிப்லி யூசுப் சுயநினைவு திரும்பாமலேயே உயிரிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக தாழ்வான தட்பவெட்ப நிலையினால் கடும் குளிர் தாக்கி,மூளை வீக்கத்திற்கு ஆளாகி அவர் உயிரிழந்து இருப்பதாக சவப்பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது என்று மலேசிய அல்பைன் மன்றம் குறிப்பிட்டுள்ளது.
இதில் இரண்டாவது மலேசியர் மீட்கப்பட்ட, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த மன்றம் தெரிவித்துள்ளது.