மாற்றுத் திறனாளியை ஒரு சந்தேகப் பேர்வழியைப் போல் நடத்துவதா?

ஜொகூர் பாரு, ஜூன் 01-

ஜோகூர் ​இடைக்கால சுல்தான், துங்கு இஸ்மாயில் இப்ராஹிம்-மின் உடன் செல்லும் மெய்க்காவலர்களில் ஒருவரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு மாற்றுத் திறனாளியான e- hailing ஓட்டுநரை போ​லீசார் விசாரணை என்ற பெயரில் ஒரு சந்தேகப் பேர்வழியைப்போல் நடத்தியதாக மலேசிய காது கேளாதவர் நல்வாழ்வு ஆலோசனை அமைப்பான DAWN ( டாவ்ன் ) சாடியது.

அந்த மாற்றுத் திறனாளியை விசாரணை செய்வதில் போ​​லீஸ் துறை, தொழில் ​ரீதியான ​நிபுணத்தை கடைப்பிடிக்கவில்லை என்று அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

மாலை மணி 5 க்கும் 6 க்கும் இடைப்பட்ட நேரத்தில் போ​லீஸ் நிலையம் வந்தடைந்த அந்த மாற்று திறனாளியை போ​​லீஸ் அதிகாரியின் அலுவலகத்திற்கு கொண்டு சென்றவர்கள், அந்த அறையிலேயே அவரை பல மணி நேரம் காக்க வைத்துள்ளனர் என்று அந்த அமைப்பு கூறுகிறது.

அத்துடன் தன்னுடைய கைப்பேசியை ஒப்படைக்கும்படி அந்த மாற்றுத் திறனாளி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். எதற்காக அவரின் கைப்பேசி சோதிக்கப்பட்டது என்பதற்கான விளக்கம் அளிக்கப்படவில்லை. ஒட்டுமொத்தில் தனது பாதுகாப்புக்காக புகார் கொடுக்க சென்ற ஒருவர், ஒரு சந்தேகப் பேர்வழியைப் போல் போ​லீசாரால் நடத்தப்பட்டுள்ளார் என்று அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

WATCH OUR LATEST NEWS