கோலாலம்பூர், ஜூன் 01-
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெட்டாலிங் ஜெயா, Damansara Damai-யில் ஆற்றோரத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்ட மூளைவளர்ச்சி குறைபாடு கொண்ட 6 வயது சிறுவன் ஜெயின் ரய்யான் அப்துல் மாட்டின் கொலை தொடர்பில் கொலையாளியை கண்டு பிடிக்க முடியாமல் மர்மம் நீடித்து வந்த நிலையில், வழக்கின் திருப்புமுனையாக அந்த சிறுவனின் சொந்த பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொலையாளி பற்றிய தகவல் அளிப்பர்களுக்கு 20 ஆயிரம் வெள்ளி வெகுமதி வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டும், எந்தவொரு துப்பும் கிடைக்காத நிலையில் கடந்த ஆறு மாத காலமாக மர்மம் நீடித்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் புன்ச்சாக் அலாம்- மில் அந்த ஆட்டிசம் ( Autisme ) சிறுவனின் சொந்த தந்தையையும், தாயாரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை குறித்து மேல்விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. அந்த சிறுவனின் பெற்றோர் கைது செய்யப்பட்டு இருப்பதை சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் உறுதிப்படுத்தியுள்ளார். அவர்களை ஒரு வாரம் காலம் தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற ஆணைப் பெறப்பட்டள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.