ஜொகூர் பாரு, ஜூன் 01-
விஷம் வைக்கப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் நான்கு யானைகள், ஜோகூர், குளுவாங் அருகில் கஹாங். கம்போங் ஸ்ரீ தீமுர் பகுதியில் இறந்து கிடந்தது இன்று சனிக்கிழமை காலையில் கண்டு பிடிக்கப்பட்டது.
யானைகள் இறந்து கிடக்கும் காட்சியை கொண்ட படங்களை உள்ளூர் மக்கள் சமூக வலைத்தளங்களில் பகிரந்து வருகின்றனர்.
இந்த யானைகள் உணவில் விஷம் வைக்கப்பட்டு கொல்லப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்ப்பட்ட போதிலும், அவற்றின் இறப்புக்கான காரணத்தை கண்டறிய புலன் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று ஜோகூர் மாநில வனவிலங்கு, தேசிய பூங்கா இலாகாவான பெர்ஹிலித்தான் இயக்குநர் அமினுதீன் அமீன் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த யானைகள் உடலில் நடத்தப்படும் ரசாயன பரிசோதனையின் முடிவு, மூன்று வாரத்தில் தெரிந்து விடும் என்று அவர் குறிப்பிட்டார்.