Selangor, Sungai Kandis – சில் வண்ணமயமான பொருட்களை ஆற்றில் கொட்டியதன் விளைவாக அவ்விடத்தில் நீல நிற நீரோட்டம் காணப்படுவதாக நம்பப்படுகிறது.
பொறுப்பற்ற நிறுவனங்கள் இரவில் அல்லது அதிகாலை வேளைகளில் அத்தகைய வண்ணப் பொருட்களை ஆற்றில் அப்புறப்படுத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சிலாங்கூர் சுற்றுச்சூழல் துறையின் இயக்குநர் Nor Aziah Jaafar தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேற்று நேரடியாக சென்று அவ்விடத்தை சோதனையிட்டதாகவும் இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் Nor Aziah கூறினார்.
அவ்விடத்தில் குழாயிலிருந்து வண்ணப் பொருட்கள் வெளியேற்றப்பட்ட கசிவுகள் மற்றும் அதன் தடயங்கள் கண்டெடுக்கப்பட்டதாக Nor Aziah விளக்கினார்.
அவ்விடத்தில் இருக்கும் தொழிற்சாலைக்கும் இதற்கும் எந்தவொரு சம்பந்தம் இல்லை என்பதுடன் மற்றொரு தரப்பு மட்டுமே இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.