இரு உதவி சுங்கத்துறை அதிகாரிகள் மீது லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு

கடந்த 2020 ஆம் ஆண்டில் 4,300 வெள்ளி லஞ்சம் பெற்றதாக இரண்டு உதவி மலேசிய சுங்கத்துறை அதிகாரிகள் Kota Bharu Sesyen நீதிமன்றத்தில் இன்று குற்றம்சாட்டப்பட்டனர்.

34 வயது Mohd Faizul Mat Nasir மற்றும் Mohamad Rasul Mohd Zukri என்ற அந்த இரு உதவி அதிகாரிகளும் நீதிபதி Ahmad Bazli Bahruddin முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டுகள் சிறை அல்லது 10,000 வெள்ளி அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 24 (1) பிரிவின் கீழ் அவ்விருவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டில் Kuala Lumpur அனைத்துலக விமான நிலையத்தின் கார்கோவிலிருந்து பொருட்களை எடுத்துச் செல்லும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் சரக்கு லாரிகளை சோதனையிடாமல் இருப்பதற்கு 38 வயது அந்த நிறுவன உரிமையாளரிடம் குறிப்பிட்ட தொகையை லட்சமாக பெற்றதாக அவ்விருவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் மறுவிசாரணை வருகின்ற ஜுலை 21 ஆம் தேதி நடைபெறவிருப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS