கிளந்தான் ஆட்சியாளர் வழங்கும் மிக உயர்ந்த விருதுக்குரிய சின்னத்தை காரில் பயன்படுத்துவதற்கு அதனை விற்பனை செய்ததாக நம்பப்படும் நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ள வேளையில் மேலும் ஓர் ஆடவரை போலீசார் தேடி வருகின்றனர்.
“Raja Kelantan Asal Bentara Setia Paduka Raja” எனும் உயரிய விருது சின்னத்தை தவறாக பயன்படுத்தியதற்காக கடந்த மே 24, 25 ஆகிய தேதிகளின் கிளந்தான் பச்சோக்- கிலும், சிலாங்கூர், செத்திய அலாமிலும் 20 க்கும் 30 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த நான்கு பெண்களும் கைது செய்யப்பட்டதாக கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் ஜாக்கி ஹாருன் தெரிவித்தார்.
இது தொடர்பாக கடந்த மே 17 ஆம் தேதி கிளந்தான் இஸ்தானா பணியாளரிடமிருந்து போலீசார் புகார் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.