கடந்த மே 31 ஆம் தேதி புக்கிட் மெர்தாஜாம், பண்டார் பெர்டா-வில் உள்ள நகைக்கடை ஒன்றில் நகைகளை களவாடிய குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு இன்று 12 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாக செபெராங் பெராய் தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஹெல்மி அரிஸ் தெரிவித்தார்.
நகைகள் களவாடப்பட்ட அன்றைய தினமே நான்கு மணி நேரத்தில் சுங்கைப்பட்டாணியில் பிடிபட்ட 30 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர், நீதிமன்றத்தில் தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டதாக ஏசிபி ஹெல்மி அரிஸ் குறிப்பிட்டார்.
ஏற்கனவே மூன்று குற்றப்பதிவுகளை கொண்ட அந்த ஆடவர் களவாடிய அனைத்து நகைகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.