சிலாங்கூர் மாநிலத்தில் வரும் ஜுலை மாதத்திற்குள் பரம ஏழ்மை நிலைமை, முற்றாக துடைத்தொழிப்பதற்கான இலக்கை மாநில அரசாங்கம் கொண்டுள்ளதாக அதன் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
சிலாங்கூர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு 861 குடும்பங்கள் பரம ஏழைகளாக அடையாளம் காணப்பட்டு , வகைப்படுத்தப்பட்டனர். அந்த எண்ணிக்கை இன்று பெருவாரியாக குறைந்து இன்னும் 245 குடும்பங்கள் மட்டுமே பரம ஏழைகளாக அடையாளம் காணப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மாநிலத்தை பரம ஏழைகள் இல்லாத மாநிலமாக உருவாக்கும் இலக்கை வெற்றிகரமாக அடைய முடியும் என்று அமிருடின் ஷாரி நம்பிக்கை தெரிவித்தார்.