பொய்யான வெடிகுண்டு மிரட்டல்

புத்ரா ஜெயாவில் சுற்றுலா, கலை, பண்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங்- கின் அலுவலகத்திற்கு முகவரியிடப்பட்டு அனுப்பி வைப்பட்ட ஒரு பொட்டளம் , பொய்யான வெடிகுண்டு மிரட்டலாகும் என்று போலீசார் உறுதிபடுத்தினர்.

இன்று புதன்கிழமை காலை 11.19 மணியளவில் J&T பொருள் பட்டுவாடா சேவையின் மூலம் அனுப்பி வைக்கபட்ட அந்த பொட்டலம், வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதைப் போன்ற தோற்றத்தில் இருந்ததாக புத்ராஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏ. அஸ்மடீ அப்துல் அஜீஸ் தெரிவித்தார்.

அந்த பொட்டலம், பின்னர் 2.45 மணியளவில் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் மூலம் அமைச்சின் 14 ஆவது மாடிக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரித்து சோதனையிடப்பட்ட போது அதில் PVC குழாய், ஒரு மின்கம்பி மற்றும் நேரத்தை குறிக்கும் Timer மட்டுமே இருந்ததாக அஸ்மடீ விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS