ஆட்டிசம் குறைபாடுடைய சிறுவன் வாகனத்தை செலுத்தியது தொடர்பில் தந்தைக்கு அபராத கடிதம் வழங்கப்பட்டது

சரவாக், ஜூன் 06-

சரவாக், சிபு-வில் ஆட்டிசம் குறைபாடு உடைய 11 வயது சிறுவன், தனியாக வாகனத்தை செலுத்திய சம்பவத்தை தொடர்ந்து, அவரது தந்தைக்கு போலீஸ் அபராத கடிதத்தை வழங்கியது.

நேற்று மாலை மணி 6.50 அளவில், சம்பந்தப்பட்ட சிறுவன் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ், தமது தரப்பு அந்நடவடிக்கையை எடுத்ததாக சிபு போலீஸ் தலைவர் சுல்கிப்லி சுஹைலி தெரிவித்தார்.

முன்னதாக, அச்சிறுவனும் அவரது பெற்றோரும் விசாரணைக்காக சிபு சாலை போக்குவரத்து போலீஸ் அலுவலகத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

பெற்றோரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அச்சிறுவன் ஆட்டிசம் குறைபாட்டை கொண்டிருப்பதும் SIBU மனநல நிபுணத்துவ கிளினிக்கில் சிகிச்சைப் பெற்று வருவதும் தெரிய வந்ததாக, சுல்கிப்லி சுஹைலி கூறினார்.

அச்சிறுவன் வாகனத்தை செலுத்தும் 30 வினாடிகள் கொண்ட காணொலி நேற்று சமூக ஊடகங்களில் பரவலாகியிருந்தது.

WATCH OUR LATEST NEWS