சாலை விபத்தில் மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர்

குவாந்தன், ஜெரான்டுட் – மாரான்- னின் 18 ஆவது கிலோமீட்டர் தொலைத்தூரத்தில் இரண்டு வாகனங்கள் மோதி கொண்டதில் மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நேற்று மாலை 6 மணியளவில் நிகழ்ந்த இச்சாலை விபத்தில் ஜெங்கா- விலிருந்து ஜெராண்துட்- டிற்கு Perodua Bezza ரக காரில் பயணித்த அம்மூவரும் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த Perodua Myvi காரின் மீது மோதியதாக Jerantut மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Zukri Muhammad தெரிவித்தார்.

இக்கோர விபத்தில் Perodua Bezza காரில் பயணித்த 21 வயது Nur Harina Fatihah Syaifol Bahari சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளை, அவரின் தாயாரான 44 வயது Norazlina Ismail Jerantut மருத்துவனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக Zukri Muhammad கூறினார்.

அதே வேளையில், Perodua Myvi – யின் ஓட்டுநரான 42 வயது Suhaimi Abd Rahman மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உயிரிழந்ததாக அவர் மேலும் தகவல் வெளியிட்டார்.

WATCH OUR LATEST NEWS