மாணவியை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக காபி கடையின் உதவியாளர் மீது குற்றச்சாட்டு

மாணவியை பாலியல் பலாத்காரம் புரிந்து அவருக்கு குழந்தை பிறக்கும் வரையில் வக்கிரமாக செயல்பட்டதாக ஒரு காபி கடையின் உதவியாளர் ஒருவர் மூவார் Sesyen நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

19 வயதுடைய அந்த காபி கடையின் உதவியாளர் நீதிபதி Abu Bakar Manat முன்னிலையில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டார்.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டுகள் சிறை மற்றும் பிரம்படி விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 376 (1) பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதத்தில் மாலை 5 மணியளவில் Johor, Batu Patat – டில் உள்ள ஒரு வீட்டில் 14 வயது மாணவியிடம் இக்குற்றத்தை புரிந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS