தாய்லாந்து பெண் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்

Perlis, Jejawi – யில் உள்ள ஒரு வாடகை வீட்டில் மேற்கொண்ட திடீர் சோதனையில் தாய்லாந்து பெண் ஒருவரை போலீசார் பாதுகாப்பாக மீட்டனர்.

முன்னதாக, 36 வயது அந்த தாய்லாந்து பெண் தனது 18 வயது காதலனுடன் யாருக்கும் தெரியாமல் நேற்று அதிகாலை ஓடிச் சென்றதாக தெரியவந்துள்ளது.

அதை தொடர்ந்து, 30 க்கும் 39 க்கும் இடைப்பட்ட வயதுடைய சந்தேகிக்கும் மூவர் கொண்ட குழு ஒன்று அந்த பெண் மற்றும் அவரின் காதலனை கையும் களவுமாக பிடித்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு இழுத்துச் சென்று அடைத்து வைத்திருந்ததாக Arau மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Ahmad Mohsin Md Rodi தெரிவித்தார்.

இதில், பாதிக்கப்பட்டவருக்கும் சந்தேகிக்கும் நபர்களுக்கும் இடையே வாங்கிய கடனை திரும்ப செலுத்துவதில் பிரச்னை இருந்ததாகவும் ஏற்கனவே அவர்கள் ஒருவருக்கொருவர் நன்கு அறிந்தவர்களாவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக Ahmad Mohsin கூறினார்.

இதுகு‌றி‌த்து குற்றவியல் சட்டம் 363 ஆவது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொண்டு வருவதாக அவர் அறிவித்தார்.

WATCH OUR LATEST NEWS